எபோலா தொற்றுக்குள்ளான அமெரிக்க மருத்துவருக்கு ஜெர்மனியில் சிகிச்சை

1 Min Read

ஆபிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா நோயால் பாதிக்கப்பட்ட அமெரிக்க மருத்துவர் ஒருவர் சிகிச்சைக்காக ஜெர்மனிக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கொங்கோவில் எபோலா பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், டொக்டர் பீட்டர் ஸ்டாஃபோர்டின், மனைவி மற்றும் அவரது நான்கு பிள்ளைகளும் நோயின் அறிகுறிகளுக்காகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் சிகிச்சைக்காக ஜேர்மனிக்கு விமானத்தில் அனுப்பப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சத்திர சிகிச்சை நிபுணரும், ‘செர்ஜ்’ என்ற கிறிஸ்தவ மிஷனரி குழுவின் தலைவருமான டொக்டர் பீட்டர் ஸ்டாஃபோர்ட், இந்நோய்ப் பரவல் கண்டறியப்படுவதற்கு முன்பு, தனக்குத் தெரியாமல் எபோலா நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்ததாகக் கூறியுள்ளார். அதன் மூலம் இவருக்கு இந்நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைகளோ அல்லது தடுப்பூசிகளோ இல்லாத இந்நோய்க்கு குருதிப்போக்கை ஏற்படுத்தும் புண்டிபுக்யோ வைரஸ் காரணமாகும். இந்நோயினால் குறைந்தது 134 பேர் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், 500 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.நகர்ப்புறங்களில் பரவியுள்ள இந்நோய்ப் பரவல் தொடர்பில், சர்வதேச நடவடிக்கை தேவைப்படும் ஒரு பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.த கார்டியன்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *