மத்திய கிழக்கு ஆபிரிக்க நாடான கொங்கோவில் எபோலா வைரஸ் நோய் தீவிரமாக பரவி வருவதால், அவசர நிலையை உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனம் செய்துள்ளது. இது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், எபோலா வைரஸ் காரணமாக உலக சுகாதார அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் நாடுகள் சர்வதேச எல்லைகளை மூட அறிவுறுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.கடந்த 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட எபோலா தொற்று பரவல் காரணமாக கொங்கோவில் சுமார் 1,000 பேர் உயிரிழந்தனர். தற்போது மீண்டும் எபோலா வைரஸ் கொங்கோவில் வேகமாக பரவிவருகிறது. இம்முறை எபோலா வைரஸ் பாதிப்பால் அங்கு இதுவரை 88 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸால் பாதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அண்டை நாடுகளான உகண்டா, தென் சூடான் போன்ற நாடுகளுக்கும் எபோலா வைரஸ் பரவும் என அஞ்சப்படுகிறது.
எபோலா வைரஸ்; WHO எச்சரிக்கை

Leave a Comment


Subscribe to our newsletter to get our newest articles instantly!
Most Read
- Advertisement -
