ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்ற முதல்வர் விஜய்

1 Min Read

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் நேற்று சென்னையில்  முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை  சந்தித்து வாழ்த்து பெற்றார். இச்சந்திப்பு ஸ்டாலினின் இல்லத்தில் இடம்பெற்றது.

முன்னாள் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க ஆழ்வார்பேட்டை இல்லத்துக்குச் சென்ற  ஜோசப் விஜய்யை, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்  வாசலுக்கே சென்று ஆரத் தழுவி வரவேற்றார். முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு ஜோசப் விஜய் பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றார்.

பதிலுக்கு ஸ்டாலினும் ஜோசப் விஜய்க்கு பொன்னாடை போர்த்தினார்.

உதயநிதி ஸ்டாலின் ஜோசப் விஜய்க்கு புத்தகம்  ஒன்றையும் அன்பளிப்புச் செய்தமை குறிப்பிடத்தக்கது இதனையடுத்து முதல்வர் ஜோசப் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறிது நேரம் உரையாடினர்.

இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, சக்கரபாணி, சேகர்பாபு உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *