24ஆவது டிஎஸ்ஐ சுப்பர் ஸ்போர்ட் பாடசாலைகள் மட்ட கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டித் தொடர், இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் கல்வி அமைச்சின் பாடசாலைகள் கரப்பந்தாட்ட சங்கத்துடன் இணைந்து நடாத்தப்படவுள்ளது.
1999ஆம் ஆண்டு இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் கல்வி அமைச்சுடன் இணைந்து இந்த போட்டியை டிஎஸ்ஐ ஆரம்பித்தது.
இந்த வருடம், நாடு முழுவதிலுமிருந்தும் சுமார் 3,500 அணிகள் பங்கேற்கும் என ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மாவட்டப் போட்டிகள் ஜுன் 10 முதல் ஓகஸ்ட் 10 வரை, வார இறுதி நாட்களில் இடம்பெறவுள்ளன. தேசிய மட்ட போட்டிகள் ஒக்டோபர் 01–05 வரை இடம்பெறவுள்ளதுடன், மேலதிக போட்டிகள் ஒக்டோபர் 15–19 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இறுதிப் போட்டிகள் நவம்பர் 14, 15ஆம் திகதிகளில் இடம்பெறும்.
மாவட்ட மற்றும் தேசிய அளவில் இடம்பெறும் இப்போட்டிகள் 11, 13, 15, 17, 19 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் பிரிவுகளாக இடம்பெறவுள்ளன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 2026 மே 20 அல்லது அதற்கு முன்னதாக உரிய வலயக் கல்விப் பணிப்பாளரிடம் (விளையாட்டுகள்) சமர்ப்பித்தல் வேண்டும். விண்ணப்பங்களை இணையதளத்தில் இருந்து பெற முடியும்.



