எரிசக்தி, முக்கிய கனிமங்கள் குறித்து ஜப்பான், அவுஸ்திரேலியா ஒப்பந்தம்

1 Min Read

எரிசக்தி மற்றும் முக்கிய கனிமங்கள் குறித்த முக்கிய ஒப்பந்தங்களில் அவுஸ்திரேலியாவும் ஜப்பானும் கையெழுத்திட்டுள்ளன. ஜப்பான் பிரதமர் சனே டகையிசியும், அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸும் இந்த உடன்படிக்கைகளில் நேற்று முன்தினம் கையெழுத்திட்டுள்ளனர்.

கடந்த மாதம் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்த நாடுகள் தற்போது எரிசக்தி மற்றும் முக்கிய கனிமங்களின் விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்த மேற்கொண்டிருக்கும் ஒப்பந்தத்தின் ஊடாக இரு தரப்பு உறவு மேலும் வலுப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானிய பிரதமர், அவுஸ்திரேலிய பிரதமருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டார்.

இரண்டு நாடுகளதும் எதிர்காலப் பொருளாதார நலன்களைக் கருத்தில் கொண்டு இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் ஒன்றாகச் செயல்படுவதன் மூலம், தற்போதும் எதிர்காலத்திலும் இரு தரப்பினரதும் வணிகங்களுக்கும் நுகர்வோருக்கும் பயனளிக்கும் வகையில், பாதுகாப்பான விநியோகச் சங்கிலிகளை அடைய முடியும் என்றும் அவுஸ்திரேலிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்கள் வர்த்தகத்தை முடக்குவதால், இரு நாடுகளும் எரிசக்தி விநியோகத்தை வலுப்படுத்த முயற்சி செய்து வரும் சூழலில் இந்த உடன்படிக்கைகள் கைச்சார்த்திடப்பட்டிருப்பது தெரிந்ததே. ரொய்ட்டர்ஸ்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *