மத்தியப்பிரதேச படகு விபத்து

1 Min Read

மத்தியப்பிரதேசத்தில் நிகழ்ந்த படகு விபத்தொன்றில் ஒன்பது பேர் உயிரிழந்த நிலையில், அவர்களில் ஐந்து பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

படகு விபத்தில் பலியானவர்களில் 9 பேர் பலி

மத்திய பிரதேசத்திலுள்ள ஜபல்பூர் மாவட்டத்திலுள்ள பார்கி என்னும் அணையில், வியாழக்கிழமையன்று சுற்றுலா படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. அந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

இந்நிலையில், அந்த 9 பேரில் ஐந்து பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

மத்தியப்பிரதேச படகு விபத்து: பலியானவர்களில் ஐந்து பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் | Tn Family Among 9 Killed In Bargi Dam Boat Tragedy

தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் என்னுமிடத்தைச் சேர்ந்த கார்குழலி (38), கார்குழலியின் கணவரான காமராஜ் (38), தம்பதியரின் மகனான தமிழ்வேந்தன் (4), சௌபாக்கியம் (42), சௌபாக்கியத்தின் மகனான மயூரன் (7) ஆகியோரே உயிரிழந்துள்ளார்கள்.

இந்த துயர சம்பவம் குறித்து பேசிய காமராஜின் தாயான ராஜலக்‌ஷ்மி, தன் பிள்ளைகள் மத்தியப்பிரதேசத்தில் வாழ்ந்துவரும் சௌபாக்கியத்தின் வீட்டுக்குச் சென்றதாகவும், அப்போது அவர்கள் படகுப்பயணம் மேற்கொள்ளும்போது அந்த துயர விபத்து அவர்களை பலிவாங்கிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மத்தியப்பிரதேச படகு விபத்து: பலியானவர்களில் ஐந்து பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் | Tn Family Among 9 Killed In Bargi Dam Boat Tragedy

இதற்கிடையில், வியாழக்கிழமை மாலை அடித்த திடீர் புயலில் அந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

அந்த படகில் பயணித்த 22 பேர் மீட்கப்பட்டுவிட்ட நிலையில், 9 பேர் தண்ணீரில் மூழ்கி பலியாகிவிட்டார்கள்.
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *