அத்தபத்துவின் சகலதுறை ஆட்டத்தால் இலங்கை மகளிருக்கு தீர்க்கமான வெற்றி

1 Min Read

மங்களாதேஷ் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய இலங்கை மகளிர் அணி மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரை 1–1 சமநிலைக்குப் கொண்டுவந்தது.

இதன்படி எதிர்வரும் சனிக்கிழமை (25) ராஜ்ஷாஹியில் நடைபெறும் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி தொடரை தீர்மானிக்கும் ஆட்டமாக மாறியுள்ளது.

ராஜ்ஷாஹியில் நேற்று (22) நடைபெற்ற போட்டியில் முதல் ஆட்டத்தில் பேங்கேற்காத இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து அணிக்கு திரும்பினார். இது அணியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அவரது சகலதுறை ஆட்டம் அணியின் வெற்றிக்கு உதவியமை குறிப்பிடத்தக்கது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்காளதேஷ் மகளிரை 45.5 ஓவர்களில் 165 ஓட்டங்களுக்கு சுருட்ட இலங்கை அணியால் முடிந்தது. சமரி அத்தபத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு மல்கி மதரா, நிமேஷா மீபகே மற்றும் இனோகா ரனவீர தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில் பதிலெடுத்தாடிய இலங்கை அணிக்கு ஹர்ஷிதா சமரவிக்ரம (50) அரைச்சதம் பெற்றதோடு சமரியுடன் ஹன்சிமா கருணாரத்ன தலா 40 ஓட்டங்களை பெற்றனர். இதன்மூலம் இலங்கை மகளிர் அணி 38.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 166 ஓட்டங்களை எட்டியது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *