ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் மத்திய கிழக்கில் உள்ள வளைகுடா நாடுகள் வரை விரிவடைந்துள்ளது, பல்வேறு கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போர் தொடர்ந்து நீடித்தால், வேலை இழப்பு உள்ளிட்ட காரணங்களால் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பணம்(remittances) குறைய வாய்ப்புள்ளது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
வளைகுடா நாடுகளில் இருந்து வரும் பணம்
வளைகுடா நாடுகளில் சுமார் 1 கோடி அளவிலான இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.

ரிசர்வ் வங்கியின் அறிக்கையின் படி, 2023-24 நிதியாண்டில் ரூ.3.74 லட்சம் கோடி வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்பபட்டுள்ளது. இந்த பணம் இந்தியாவின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இது இந்தியாவிற்கு வெளிநாடுகளில் இருந்து பணத்தில் 38 சதவீதமாகும். இதில் 19.2 சதவீதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து மட்டும் வந்துள்ளது.
முதலிடத்தில் மகாராஷ்டிரா
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெரும் நாடுகளின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.

இதில் மகாராஷ்டிராவிற்கு வளைகுடா நாடுகளில் இருந்து ரூ.2.02 லட்சம் கோடி பணம் வந்துள்ளது. இது மொத்த பண வரவில் 20.5 சதவீதம் ஆகும்.
இதற்கு அடுத்தபடியாக ரூ1.97 லட்சம் கோடிகளுடன் கேரளா 2வது இடத்தில் உள்ளது. இது மொத்த பண வரவில் 19.7 சதவீதம் ஆகும்.
இதில், தமிழ்நாடு, ரூ.1.02 லட்சம் கோடிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. இது மொத்த பண வரவில் 10.4 சதவீதம் ஆகும்.
80,000 கோடிகளுடன் தெலுங்கனா 4வது இடத்தில் உள்ளது. இது மொத்த பண வரவில் 8.1 சதவீதம் ஆகும்.
7.7 76,000 கோடிகளுடன் கர்நாடகா 5வது இடத்தில் உள்ளது. இது மொத்த பண வரவில் 7.7 சதவீதம் ஆகும்.
43,000 கோடிகளுடன் ஆந்திரா 6வது இடத்திலும், 42,000 கோடிகளுடன் டெல்லி 7வது இடத்திலும், 41,000 கோடிகளுடன் பஞ்சாப் 8 வது இடத்திலும், 38,000 கோடிகளுடன் குஜராத் 9வது இடத்திலும், 30,000 கோடிகளுடன், உத்தரப் பிரதேசம் 10 வது இடத்திலும் உள்ளது.




