ஆப்பிரிக்க கிண்ண பட்டத்தை பறித்து எதிரணிக்கு வழங்கிய வாரியம்! 58 நாட்களுக்கு பின் நடவடிக்கை

1 Min Read

செனகல் அணியிடம் இருந்து ஆப்பிரிக்க கிண்ண கால்பந்து பட்டம் பறிக்கப்பட்டு, அதன் போட்டியாளரான மொராக்கோவிற்கு வழங்கப்பட்டது.

ஆவேச மோதல்

கடந்த ஜனவரி 18ஆம் திகதி அன்று நடந்த ஆப்பிரிக்க கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் செனகல் மற்றும் மொராக்கோ அணிகள் மோதின.

Senegal stripped trophy and morocco winner

அப்போட்டியில் கடைசி நிமிடத்தில் வழங்கப்பட்ட பெனால்டிக்கு எதிர்ப்பு கிளம்பியது. அதனால் வீரர்களிடையே ஆவேச மோதல் ஏற்பட்டு, மைதானத்தை விட்டு வெளியேறினர்.

அதனைத் தொடர்ந்து, குழப்பத்திற்கு பின் செனகல் அணி மீண்டும் மைதானத்திற்கு திரும்பினர்.

Senegal stripped trophy and morocco winner

58 நாட்கள் கழித்து

அப்போது பெனால்டி தவறவிடப்பட்டது. மேலும் அவர்கள் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.

இந்த நிலையில், இந்நிகழ்வு முடிந்து 58 நாட்களுக்குப் பிறகு முன்னெப்போதும் இல்லாத ஒரு தீர்ப்பு நடவடிக்கையை மேல்முறையீட்டு வாரியம் எடுத்துள்ளது.

அதாவது, மொராக்கோ அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதாக, 58 நாட்கள் கழித்து அறிவிக்கப்பட்டு செனகல் அணியிடம் இருந்து ‘ஆப்பிரிக்க கிண்ண கால்பந்து பட்டம் (AFCON)’ பறிக்கப்பட்டு, அதன் போட்டியாளரான மொராக்கோவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

Senegal stripped trophy and morocco winner

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *