தமிழகத்தின் மாம்பழ நகரம் என்று அழைக்கப்படும் மாவட்டம்.., எது தெரியுமா?

1 Min Read

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான சேலம், மாநிலத்தின் ஐந்தாவது பெரிய நகரமாகும். இந்த நகரம் 1772ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள், சாளுக்கியர்கள் உள்ளிட்ட பல அரச வம்சங்கள் சேலத்தை ஆட்சி செய்துள்ளன.

தமிழ்நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ள சேலம், தொழில்துறை வளர்ச்சி, கலாச்சார பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகுக்காக பிரசித்தி பெற்றது.

தமிழகத்தின் மாம்பழ நகரம் என்று அழைக்கப்படும் மாவட்டம்.., எது தெரியுமா? | Salem Is Called The Mango City Of Tamil Nadu

எஃகு நகரம் என அழைக்கப்படும் சேலத்தில் பல எஃகு ஆலைகள் செயல்பட்டு, கம்பி, பார்கள் போன்ற எஃகு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

மேலும், சேலம் “மாம்பழ நகரம்” என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு பல வகையான சுவையான மாம்பழங்கள் விளைகின்றன.

சேலத்தில் விளையும் மல்கோவா மாம்பழம் உலகளவில் பிரபலமானது. இதன் இனிப்பு சுவை மற்றும் நறுமணம் தனித்துவமானதாகும்.

இங்கு மாம்பழம் அதிகம் விளைவதற்கு ஏற்ற காலநிலை மற்றும் மண் அமைப்பு உள்ளது. குறிப்பாக, மண்ணில் உள்ள அதிக கால்சியம் மாம்பழத்தின் சுவையை உயர்த்துகிறது.

தமிழகத்தின் மாம்பழ நகரம் என்று அழைக்கப்படும் மாவட்டம்.., எது தெரியுமா? | Salem Is Called The Mango City Of Tamil Nadu  மல்கோவா, அல்போன்சா, இமாம் பசந்த், சேலம் பெங்களூரா, நடுசாளை போன்ற மாம்பழ வகைகள் சேலத்தைச் சுற்றிய பகுதிகளில் அதிகமாக பயிரிடப்படுகின்றன.

ஏற்காட்டுக்கு செல்லும் நுழைவாயிலாக சேலம் உள்ளது. அதனால் ஏற்காடு “ஏழைகளின் ஊட்டி” என்றும் அழைக்கப்படுகிறது.

சேலத்தில் கோட்டை மாரியம்மன் கோயில், சுகவனேஸ்வரர் கோயில், 1008 சிவலிங்க கோயில் போன்ற பிரபல கோயில்கள் உள்ளன.

தமிழகத்தின் மாம்பழ நகரம் என்று அழைக்கப்படும் மாவட்டம்.., எது தெரியுமா? | Salem Is Called The Mango City Of Tamil Nadu

மேட்டூர் அணை போன்ற முக்கிய நீர்வளமும் சேலத்தில் அமைந்துள்ளது.

அதேபோல், செர்வராயன் மலை, கஞ்ச மலை உள்ளிட்ட மலைகளால் சூழப்பட்ட அழகிய நகரமாக சேலம் விளங்குகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *