இன்று மட்டக்களப்பு மாவட்டம் களுவாச்சிக்குடி பிரதேசத்திற்கு உட்பட்ட துறை நீலாவாணை எனும் கிராமத்தில் விஷேட தேவை உள்ள நைனா எனும் சிறு பிள்ளைக்கு உரிய உதவி திட்டம் வழங்கி வைக்கப்பட்டது. மேலும் இப் பிள்ளையினை ராஜா கோபால் எனும் தப்பதினரே பராமரித்து வருகிறார்கள். 130000/- ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் தமிழ் மக்கள் இளைஞர் அணி சார்பாக வழங்கி வைக்கப்பட்டது.
கத்தாரில் தொழில் புரியும் உறவுகளால் 100,000/- ரூபாய் பணம் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் உலர் உணவுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.
தமிழ் மக்கள் இளைஞர் அணி வறுமை கோட்டின் கீழ் வாழும் பல குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளையும், மாணவர்களுக்கு கல்விசார் உதவிகளையும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.













