இலங்கை-சீன சமூக மற்றும் பண்பாட்டு ஒத்துழைப்பு சங்கத்தின் தலைவரான இந்திரானந்த அபேசேகர, சீன அரசாங்கத்தின் முக்கிய அமைப்பான ‘வெளிநாடுகளுடனான யுன்னான் மக்கள் சங்கத்தினால்’ (YNPAFFC) சர்வதேச அளவிலான கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
யுன்னான் மக்கள் சங்கத்தின் முதலாவது கவுன்சிலின் உறுப்பினராக அவர் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த உயரிய பதவியைப் பெறும் முதலாவது வெளிநாட்டவர் இந்திரானந்த அபேசேகர என்பது குறிப்பிடத்தக்கது.




