துருக்கியில் நடைபெறும் நேட்டோ உச்சி மாநாட்டின் முடிவுகளை ரஷ்யா உன்னிப்பாகக் கண்காணிக்கும் என்று கிரெம்ளின் நேற்று தெரிவித்தது.
ஐரோப்பா தனது பாதுகாப்புச் செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழுத்தம் கொடுத்து வரும் நிலையிலும், ஈரான் போர் மற்றும் கிறீன்லாந்து விவகாரம் தொடர்பாக பல மாதங்களாக நிலவி வரும் கொதிநிலைக்கு மத்தியிலும் நேட்டோ தலைவர்கள் அங்காராவில் கூடியுள்ளனர்.
அமெரிக்கா, கனடா, உக்ரைன் ஜனாதிபதிகள் உட்பட நேட்டோவில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் நேற்று துருக்கியை சென்றடைந்தனர்.
இந்த சூழலில் கிரெம்ளின் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ், அங்காராவிலிருந்து வரும் அனைத்து செய்திகளையும் தகவல்களையும் நாங்கள் கண்காணிப்போம் என்றுள்ளார். ரொய்ட்டர்ஸ்




