உள்ளாட்சி தேர்தல் குறித்து, அந்த நேரத்தில் நிர்வாகக் குழு கூட்டம் கூட்டி அறிவிப்போம். அதே நேரத்தில் தற்போது திமுகவுடன் கூட்டணி தோழமை தொடர்கிறது என்று வைகோ தெரிவித்தார்.
கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர், “தமிழக மக்களின் ஆவேசத்திற்கு மத்திய அரசு ஆளாக நேரிடும் என்ற எண்ணம் மேகேதாட்டு விவகாரத்தில் வந்தால் அன்றி வேறு வழியில்லை. மேகேதாட்டில் அணை கட்ட அனுமதிக்ககூடாது என மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஜூன் 2-ம் திகதி சென்னையில் பல்வேறு கட்சி, அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. முதல்வர் ஜோசப் விஜய், ஆட்சிக்கு வந்து சில நாட்கள் தான் ஆகின்றன. அதிகாரத்திற்கு, அனுபவத்திற்கு அவர் புதிது. இப்போது அவர் நிர்வாகத்திற்குள் சென்ற பின்னர் தான் அனைத்து கஜானாவும் காலியாக பணமே இல்லை எனத் தெரிகிறது. அவருக்கு 6 மாதம் காலம் அவகாசம் வழங்க வேண்டும். அதுவரை விமர்சிக்க வேண்டாம்.



