டி20 இல் இரட்டைச் சதம் பெற சூர்யவன்ஷி இலக்கு

1 Min Read

டி20 கிரிக்கெட் வரலாற்றில் இரட்டைச் சதம் பெற்ற முதல் வீரர் என்ற சாதனையைப் படைப்பதே தனது இலக்கு என்று ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் 15 வயதான இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார்.

கெவின் பீட்டர்சனின் யூடியூப் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் 2013 ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணிக்காக அடித்த 175 ஓட்டங்கள் என்ற சாதனையை முறியடிப்பதற்கு முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் அரைசதங்களைக் கொண்டாடுவதில் தனக்கு அதிக விருப்பமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு 14ஆவது வயதில் மிக இளம் ஐபிஎல் வீரராக அறிமுகமான சூர்யவன்ஷி, நடப்பு தொடரில் விளையாடிய 14 போட்டிகளில் 1 சதம், 3 அரைசதங்கள் அடங்கலாக 583 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

அத்துடன் இந்தத் தொடரில் 53 சிக்ஸர்களை அடித்து, ஒரே ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்களை பெற்ற இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதமடித்து, ஐபிஎல் வரலாற்றில் அதிவேக சதம் அடித்த இந்திய வீரர் எனவும் சாதனை படைத்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *