இந்தியாவும் கம்போடியாவும் 15 நாள் கூட்டு இராணுவ பயிற்சி

1 Min Read

பதினைந்து நாட்கள் கூட்டு இராணுவப் பயிற்சியை இந்தியாவும் கம்போடியாவும் ஆரம்பித்துள்ளன. கம்போடியாவின் காம்போங் ஸ்பியூ மாகாணத்தில் அமைந்துள்ள அரச விமானப்படை பயிற்சி மையத்தில் இடம்பெறும் இப்பயிற்சியில் 120 இந்திய இராணுவத்தினரும் கம்போடிய அரச இராணுவத்தைச் சேர்ந்த 160 வீரர்களும் பங்குபற்றியுள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இப்பயிற்சி முன்னெடுக்கப்படுகிறது. இப்பயிற்சியின் ஊடாக பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்வதற்கான கூட்டுத் திறன்களை மேம்படுத்தி, இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசியா முழுவதும் புவிசார் அரசியல் போட்டி தீவிரமடைந்து வரும் நிலையில், கம்போடியா தனது பாதுகாப்பு கூட்டாண்மைகளை விரிவுபடுத்தும் வகையில் இப்பயிற்சியை முன்னெடுத்துள்ளது.

மாறிவரும் உலகளாவிய பாதுகாப்பு சவால்களுக்கு மத்தியில் இடம்பெறும் இப்பயிற்சி, ஐ.நா. அமைதி காக்கும் சூழ்நிலைகளுடன் இணைந்ததாக பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மையமாகக் கொண்டிருக்கும் என்று பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *