நீண்ட தூர ஹைப்பர்சொனிக் ஏவுகணையை சோதித்த இந்தியா

1 Min Read

ஒடிசா கடற்கரைக்கு அப்பால், இந்தியா தனது நீண்ட தூர அதிவேக ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்துள்ளது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் உருவாக்கப்பட்ட இந்த ஏவுகணை 1,500 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இலக்கைத் துல்லியமாகத் தாக்கக்கூடியதாகும்.

இந்த ஏவுகணை நாட்டின் பாதுகாப்பு வரம்பை விரிவுபடுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாகும் என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏவுகணை ஏவப்பட்டது முதல் தாக்குதல் வரை அதன் அதிவேகப் பயணம், செயற்றிறன் உள்ளிட்ட அனைத்து விடயங்கள் குறித்தும் இந்த சோதனையின் போது துல்லியமாக அவதானிக்கப்பட்டுள்ளன.

இது ஒரு ஹைப்பர்சோனிக் ஏவுகணை என்பதோடு பல தடவைகள் தாவிச் செல்லக்கூடிய வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது. தாழ்வாகப் பயணித்து ரேடார் கண்டறிதலில் இருந்து தப்பிக்கக்கூடிய திறனையும் கொண்டுள்ளது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட உணரிகளைப் பயன்படுத்தி, நிலையானவற்றை மாத்திரமல்லாமல் நகரும் இலக்குகளையும் தாக்கும் திறன் இதற்குண்டு என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *