முதலிடத்திலுள்ள பஞ்சாபுக்கு அடுத்தடுத்து 2ஆவது தோல்வி

1 Min Read

ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் பஞ்சாப் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக தொடர்ந்து இரண்டாவது தோல்வியை சந்தித்தது. தனது முதல் ஏழு போட்டிகளிலும் தோல்வியுறாத அணியாக இருந்த நிலையிலே அடுத்தடுத்து தோல்விகளை எதிர்கொண்டுள்ளது.

அஹமதாபத்தில் நேற்று முன்தினம் (03) நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் குஜராத் அணி 12 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்திற்கு முன்னேறியது. பஞ்சாப் முதலிடத்தில் இருந்தபோதும் அது 13 புள்ளிகளை பெற்றிருக்கும் நிலையில் முதல் இடத்திற்கும் ஐந்தாவது இடத்திற்கும் இடையே ஒரு புள்ளியே வித்தியாசம் இருந்தது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட பஞ்சாப் அணி 20 ஓவர்களுக்கும் 9 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களையே எடுத்தது. ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். பதிலெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் 19.5 ஓவர்ளில் 6 விக்கெட்டுகளை இழந்து 167 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. ஆரம்ப வீரர் சாய் சுதர்ஷன் 41 பந்துகளில் 57 ஓட்டங்களைப் பெற்றார். இதேவேளை நேற்று முன்தினம் நடைபெற்ற மற்ற போட்டியில் தனது முதல் ஆறு போட்டிகளிலும் வெற்றியை சந்திக்காக கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசஸ் ஹைத்ராபாத் அணியை 7 விக்கெட்டுகளால் வீழ்த்தியதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது வெற்றியை பெற்றுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *