சம்மாந்துறை ஸ்ட்ரைக்கர்ஸ் விளையாட்டு கழகம் நடாத்திய ஸ்ட்ரைக்கர்ஸ் சம்பியன் கிண்ணம் கிரிக்கெட் தொடரில், சம்மாந்துறை எஸ்.எஸ்.சி. விளையாட்டுக் கழகம் சம்பியன் பட்டத்தை வென்றது.
சம்மாந்துறை பொது மைதானத்தில் கடந்த சனிக்கிழமை (02) நடைபெற்ற இத்தொடரில், பிராந்தியத்திலுள்ள 14 முன்னணி கழகங்கள் பங்குபற்றின. இறுதிப் போட்டியில் எஸ்.எஸ்.சி. அணியினர் சம்மாந்துறை யுனிட்டி விளையாட்டு கழக அணியை 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றனர்.
இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகனாக எஸ்.எஸ்.சீ. அணியின் சிப்ராகும், தொடர் நாயகனாக யுனிட்டி அணியின் முஸாபீரும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



