நீங்கள் துலாம் லக்னத்தில் பிறந்தவரா? உங்களின் குணம் இது தானாம்

Karan
By
Karan
1 Min Read

ஜோதிடத்தில் ஏழாவது ராசியாக இருக்கக்கூடிய துலாம் ராசி சனிபகவான் உடைய உச்ச வீடாகவே இருக்கிறது. மேலும், துலாம் ராசியின் சின்னம் தராசு என்பதால் துலாம் ராசியினர் ஒருவரை சரியாக இடைப்போட்டு கணிப்பதில் வல்லவராக இருப்பார்.

துலாம் ராசி, துலாம் லக்னத்தில் பிறந்தவர்கள் சில நேரங்களில் விட்டுக் கொடுத்து செல்வதில் தயக்கம் காட்டுவார்கள். மேலும், இவர்கள் எவ்வளவு பெரிய காரியமாக இருந்தாலும் உண்மையை சொல்லியே செயல்பட வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள்.

அது மட்டுமல்லாமல் இந்த துலாம் ராசி லக்னத்தில் பிறந்தவர்கள் எப்பொழுதும் ஒரு முதலாளியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். இவர்கள் எந்த இடத்தில் வேலை செய்பவராக இருந்தாலும் இவர்களுக்கு பணி புரிபவர்களை வேலை வாங்குவதில் இவர்கள் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

பெரும்பாலும் துலாம் லக்னத்தில் பிறந்தவர்கள் சொந்தத் தொழில் செய்யக்கூடியவர்களாகவே இருக்கிறார்கள். அதோடு துலாம் லக்னத்தை பொருத்தவரை இவர்களிடம் இருக்க கூடிய நல்ல குணம் என்னவென்றால் இவர்கள் தவறு செய்தாலும் தவறு என்று ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள்.

அதாவது யார் தவறு செய்தாலும் அதை சரியான முறையில் தட்டி கேட்கக்கூடிய ஒரு அற்புதமான குணம் கொண்டிருப்பார்கள். மேலும் துலாம் ராசியினருடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று முழுமையாக இந்த காணொளிபார்த்து தெரிந்து கொள்வோம்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *