நீரிலிருந்து மீண்ட பழைய நகரம்: மவுஸ்சாகலையில் வெளிப்பட்ட வழிபாட்டுத் தலங்களின் இடிபாடுகள்!

2 Min Read

மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்ததால், மாஸ்கெலிய பழைய நகரத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களின் இடிபாடுகள் மீண்டும் வெளிப்பட்டுள்ளன.

தேசிய நீர்மின் சக்தி அமைப்புக்குச் சொந்தமான மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், நீர்த்தேக்கத்தில் மூழ்கியிருந்த நீரில் மூழ்கிய மஸ்கெலிய பழைய நகரத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களின் இடிபாடுகள் இப்போதெல்லாம் மீண்டும் நீரிலிருந்து வெளிவருவது காணப்படுகிறது.

தேசிய நீர்மின் சக்தி அமைப்புக்குச் சொந்தமான மஸ்கெலிய மவுசாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம், இன்று (26) காலை 6.00 மணி நிலவரப்படி, அதன் வழிந்தோடும் மட்டத்திலிருந்து 34 அடி குறைவாக இருந்தது என திட்டப் பொறுப்பு பொறியாளர்கள் தெரிவித்தனர்.

மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்து வருவதால், நீர்த்தேக்கத்திற்குள் மூழ்கியிருந்த பழைய மாஸ்கெலியா நகரின் மதத் தலங்களில் ஒன்றான பௌத்தக் கோயிலின் சமாதி சிலை, ஸ்ரீ சண்முகநாத சுவாமி ஆலயம் கங்கு வத்தை நகரில் இருந்த விநாயகர் கோயில், இஸ்லாமிய மசூதி மற்றும் கத்தோலிக்க தேவாலயத்தின் இடிபாடுகள் ஆகியவை தற்போது நீரிலிருந்து வெளிப்பட்டுக் காணப்படுகின்றன.

மத்திய மலைப்பகுதிகளில் உள்ள நீர்மின் நிலையங்களின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழை இல்லாததால், தேசிய நீர்மின் சக்தி அமைப்பைச் சேர்ந்த காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும், இன்று காலை 6.00 மணி நிலவரப்படி, அதன் நிரம்பி வழியும் மட்டத்திலிருந்து 40 அடியாகக் குறைந்துள்ளதாகவும் லக்சபான நீர் மின் நிலைய நீர் தேக்க தத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட இன்னும் 6 அடி உயர வேண்டும் கென்யோன் நீர்தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட இன்னும் 4 அடி உயர வேண்டும் விமல சுரேந்திர நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 2 அடி உயர வேண்டியுள்ளது மேல் கொத்மலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட இன்னும் 5 அடி நீர் நிரம்ப வேண்டும் என நீர்த்தேக்கங்களின் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை வேளையில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது இதன் காரணமாக மலையக பகுதியில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களுக்கு நீரை வழங்கும் சகல ஓடைகள் ஆறுகள் நீர் வீழ்ச்சிகளில் தற்போது நீர் வரத்து அதிகரித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *