மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழலுக்கிடையில், ஆறு இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிரிழந்த இந்தியர்கள் எத்தனை பேர்?
கடந்த வாரம், சவுதி அரேபியாவில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததாக சவுதி அரசு முதன்முறையாக தெரிவித்த நிலையில், ஓமானில் இருவரும், கப்பலொன்றில் பணி செய்துவந்த மூன்று பேரும் என மொத்தம் ஆறு இந்தியர்கள் உயிரிழந்துள்ளார்கள், ஒருவரைக் காணவில்லை.

அத்துடன், இந்தியர்கள் பலர் தாக்குதலில் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிவருகின்றன.
சமீபத்தில், அபுதாபியை நோக்கி வீசப்பட்ட ஏவுகணை ஒன்றைத் தாக்கி அழிக்கும்போது, அதன் பாகங்கள் விழுந்ததில் அபுதாபியில் இந்தியர் ஒருவர் காயமடைந்துள்ளதாக அபுதாபி அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.



