ஈரான் தாக்குதலில் இந்தியர் கொல்லப்பட்டதாக வெளியான தகவல்: தூதரகம் விளக்கம்

1 Min Read

ஈரான் தாக்குதலில் சவுதி அரேபியாவில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை உருவாக்கியிருந்த நிலையில், அது குறித்து சவுதி அரேபியாவிலுள்ள இந்திய தூதரகம் விளக்கமளித்துள்ளது.

ஈரான் தாக்குதலில் இந்தியர் கொல்லப்பட்டதாக வெளியான தகவல்

சவுதி அரேபியாவிலுள்ள Al Kharj என்னுமிடத்தில் அமைந்துள்ள குடியிருப்புப் பகுதியில் ஈரான் வீசிய குண்டு ஒன்று விழுந்ததாகவும், அதில் இந்தியர் ஒருவரும் பங்களாதேஷ் நாட்டவர் ஒருவரும் கொல்லப்பட்டதாகவும், பங்களாதேஷ் நாட்டவர்கள் 12 பேர் காயமடைந்ததாகவும் சவுதி அரேபியா தரப்பிலிருந்து தகவல் வெளியானது.

இந்திய தூதரகம் விளக்கம் இந்நிலையில், சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் அமைந்துள்ள இந்திய தூதரகம், ஆறுதலளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், Al Kharjஇல் நேற்று மாலை நடந்த துரதிர்ஷ்ட சம்பவத்தில் இந்தியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்னும் செய்தி ஆறுதளிப்பதாக அமைந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், Al Kharjஇல் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த இந்தியர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், அவரை இந்திய தூதரக அதிகாரி ஒருவர் சந்தித்ததாகவும் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *