டெக்சாஸ் மதுக்கடையில் துப்பாக்கிச் சூடு: ஈரான் பதற்றத்துக்கு மத்தியில் FBI அதிகாரிகள் தீவிர விசாரணை

1 Min Read

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மதுக்கடையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்து FBI அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரில் அமைந்துள்ள மதுபான விடுதி ஒன்றில் மர்ம நபர் புகுந்து திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததுடன் 14 பேர் வரை காயமடைந்து இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், பதிலடி தாக்குதல் நடத்தி துப்பாக்கி ஏந்திய மர்ம நபரை சுட்டுக் கொன்றனர்.

டெக்சாஸ் மதுக்கடையில் துப்பாக்கிச் சூடு: ஈரான் பதற்றத்துக்கு மத்தியில் FBI அதிகாரிகள் தீவிர விசாரணை | Texas Austin Bar Shooting Trigger Fbi Investigatio

பயங்கரவாத கோணத்தில் விசாரணை

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தி வரும் இந்த நேரத்தில் இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்று இருப்பதால், இந்த தாக்குதல் பயங்கரவாத கும்பல்களுடன் தொடர்புடையதா என்ற கோணத்தில் மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரணையை தொடங்கியுள்ளன.

சுட்டுக் கொல்லப்பட்ட சந்தேக நபர் 53 வயது என்டியாகா தியாக்னே என்று உள்நாட்டு பாதுகாப்பு படையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

தாக்குதல்தாரிக்கு மனநல பிரச்சினைகள் இருப்பதாக கூறப்பட்டாலும், FBI அதிகாரிகள் நடத்தப்பட்ட தாக்குதலை பயங்கரவாத செயலாக கருதி விசாரித்து வருகின்றனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட தாக்குதல்தாரி, தாக்குதலின் போது ஈரான் தேசிய கொடி பொறிக்கப்பட்ட சட்டையை அணிந்து இருந்ததுடன், Property of Allah என்று எழுதப்பட்ட மேலங்கியை அணிந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

செனகல் நாட்டை பூர்வீகமாக கொண்ட தியாக்னே, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவில் வசித்து வருவதுடன் அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *