பிரித்தானியக் கடல் வழியாக புடினின் எண்ணெய் கப்பல்கள்… எச்சரிக்கும் பாதுகாப்பு நிபுணர்கள்

3 Min Read

ரஷ்யாவின் சட்டவிரோத எண்ணெய் கப்பல்கள் ஆங்கிலக் கால்வாய் வழியாக வெளிப்படையாகப் பயணிக்கும் நிலையில், பிரித்தானியாவின் கடற்பகுதியில் விரைவில் ஒரு இராணுவ மோதல் ஏற்படக்கூடும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வெளிப்படையாக

பெரும்பாலும் ரகசிய நடவடிக்கை என்று குறிப்பிடப்படும் ரஷ்யாவின் எண்ணெய் கடத்தலில் ஈடுபடும் கப்பல்கள், மேற்கத்திய தடைகள், தடைகள் மற்றும் விலை வரம்புகளை மீறி உலகின் மிகவும் பரபரப்பான கப்பல் பாதை வழியாக உண்மையில் வெளிப்படையாகவே மில்லியன் கணக்கான பீப்பாய்கள் எண்ணெயை கொண்டு செல்கின்றன.

பிரித்தானியக் கடல் வழியாக புடினின் எண்ணெய் கப்பல்கள்... எச்சரிக்கும் பாதுகாப்பு நிபுணர்கள் | Putin Shadow Fleet British Waters

ஒவ்வொரு மாதமும் டசின் கணக்கான இந்தக் கப்பல்கள் டோவர் ஜலசந்தி வழியாகச் செல்கின்றன. கடந்த நான்காண்டுகளாக நீடிக்கும் உக்ரைனுக்கு எதிரான போரில், விளாடிமிர் புடினுக்கு பொருளாதார சிக்கல் ஏற்படாத வகையில் சுமார் 800 கப்பல்கள் இதுபோன்று செயற்பாட்டில் உள்ளன.

இந்த வாரம் தான், ஸ்டார்மர் அரசாங்கம் ரஷ்யாவிற்கு எதிரான மிகப்பெரிய பொருளாதாரத் தடைகளை அறிவித்தது, இது முக்கியமான எண்ணெய் வருவாயைக் குறைத்து, ரஷ்யாவின் சட்டவிரோதப் போரை நடத்தும் திறனைக் குறைக்கும் முயற்சியாகும்.

உண்மையில், ரஷ்ய கச்சா எண்ணெயில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை கடத்தல் கப்பல்களால் ஏற்றுமதி செய்யப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆனால் பாதுகாப்பு அமைச்சகம் ரஷ்ய கடத்தல் கப்பல்களைத் தடுப்பது, நடவடிக்கைகளை சீர்குலைப்பது உள்ளிட்டவைக்கு முன்னுரிமை என்று வலியுறுத்துகிறது.

மேலும், ரஷ்யா வெளிப்படையாக மேற்கத்திய தடைகளை மீறுவது என்பது பிரித்தானிய கடற்பகுதியில் ஒரும் பெரும் மோதலுக்கு வழிவகுக்கும் என்றே பாதுகாப்பு நிபுணர்களின் எச்சரிக்கையாக உள்ளது.

பாதுகாப்பு ஆய்வாளரான பேராசிரியர் மைக்கேல் கிளார்க் தெரிவிக்கையில், நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் நோர்வே நாடுகள் மற்றும் வடக்கு ஐரோப்பாவின் கடல் செல்லும் நாடுகள் என அனைவரும் பிரித்தானியாவுடன் இணைந்து ஒருமித்த கருத்துக்கு வர வேண்டும் என்பதுடன், ரஷ்ய கப்பல்கள் கடற்படை பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டாலும், கடுமையான நடவடிக்கைக்கு முன்வர வேண்டும் என்றார்.

அப்படியான ஒருங்கிணைந்த ஒரு நகர்வு முன்னெடுக்கப்பட்டால், இந்த வருடம் எப்போதாவது கடலில் ஒருவித இராணுவமயமாக்கப்பட்ட மோதலுக்கான நிலை ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியக் கடல் வழியாக புடினின் எண்ணெய் கப்பல்கள்... எச்சரிக்கும் பாதுகாப்பு நிபுணர்கள் | Putin Shadow Fleet British Waters

சட்டப்பூர்வமான கொடியின் கீழ் பயணிக்கும் அனைத்து கப்பல்களும் கடல்சார் சட்டத்தின் கீழ் சுதந்திரமான முறையில் பயணிக்கும் உரிமையைப் பெற்றுள்ளன.

பல நாடுகள் உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பிற்கு பின்னரும் ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிகத்தை மேற்கொண்டு வருகின்றன. இந்த மாதம் மட்டும் ஆங்கிலக் கால்வாய் வழியாக எண்ணெய் ஏற்றப்பட்ட மூன்று ரஷ்ய கப்பல்கள் பயணித்துள்ளன.

ஒரு மில்லியன் பீப்பாய் எண்ணெய் ஏற்றக்கூடிய Rigel என்ற கப்பல் கேமரூன் கொடியின் கீழ் பயணித்துள்ளது. குறித்த கப்பலானது பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளால் தடை செய்யப்பட்டுள்ளது.

600க்கும் மேற்பட்ட

அதாவது தடை விதிக்கும் எந்த நாடுகளிலும் துறைமுக வசதிகளைப் பயன்படுத்த முடியாது, ஆனால் Rigel கப்பல் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. அதே நாளில் Kousai என்ற கப்பலும் சியரா லியோன் கொடியுடன் பயணித்துள்ளது.

ஆனால், 24 மணி நேரத்திற்குள் அரசாங்க மின்னஞ்சல் முகவரிக்கு காப்பீட்டுச் சான்றினை மின்னஞ்சல் செய்ய வேண்டும் என்று கடலோர காவல்படையால் மாலுமிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ரஷ்யாவின் இப்படியான 600க்கும் மேற்பட்ட கப்பல்களிடமிருந்து காப்பீட்டு ஆவணங்களைக் கோரியுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.

பிரித்தானியக் கடல் வழியாக புடினின் எண்ணெய் கப்பல்கள்... எச்சரிக்கும் பாதுகாப்பு நிபுணர்கள் | Putin Shadow Fleet British Waters

பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்டுள்ள Hyperion என்ற கப்பல் ரஷ்யக் கொடியின் கீழ் பயணித்து, துணிச்சலுடன் ஆங்கில கால்வாயைக் கடந்து சென்றது.

டிசம்பர் மாதம் இந்த கப்பலானது வெனிசுலாவிற்கு இறக்குமதி நடத்தியதன் பின்னர் சியரா லியோன் கொடியுடன் அமெரிக்க கடற்படையின் தடுப்புகளை முறியடித்துச் சென்றது.

இந்த நிலையில், வெனிசுலாவுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பல்களுக்கு எதிராக அமெரிக்கா இராணுவ நடவடிக்கையைத் தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு முதல் குறைந்தது ஏழு கப்பல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *