ஒவ்வொரு மாதமும் நான்கு புதிய விமானங்கள்… 1000 விமானிகளைப் பணியமர்த்தும் இந்திய நிறுவனம்

2 Min Read

நாட்டின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான இண்டிகோ, மிகப் பெரிய அளவில் விமானிகளை பணியமர்த்த தயாராகி வருகிறது.

நான்கு புதிய விமானங்கள்

வெளியான தகவலின் அடிப்படையில், இண்டிகோ நிறுவனம் 1,000க்கும் மேற்பட்ட விமானிகளை பணியமர்த்தும் என்றே கூறப்படுகிறது. இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் எந்தவொரு விமான நிறுவனமும் மேற்கொள்ளும் மிகப்பெரிய ஆட்சேர்ப்பு நடவடிக்கை இதுவென்றே கூறுகின்றனர்.

ஒவ்வொரு மாதமும் நான்கு புதிய விமானங்கள்... 1000 விமானிகளைப் பணியமர்த்தும் இந்திய நிறுவனம் | Indigo To Recruit En Masse

கடந்த ஆண்டு டிசம்பரில், ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக ஏழு நாட்களில் 5,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்ட செயல்பாட்டுச் சிக்கல்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வெளியான தகவலின் அடிப்படையில், விமானி, பயிற்சி பெறும் முதல் அதிகாரி, மூத்த முதல் அதிகாரி உள்ளிட்ட பொறுப்புகளுக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்படும்.

மட்டுமின்றி, ஒழுங்குமுறை தேவைகளை விரிவுபடுத்தவும் பூர்த்தி செய்யவும் இண்டிகோ நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது. அத்துடன், இண்டிகோ நிறுவனம் ஒவ்வொரு மாதமும் நான்கு புதிய விமானங்களை அதன் சேவையில் சேர்க்க இருக்கிறது.

இதனால் புதிய இந்த விமானங்களை இயக்க புதிய விமானிகள் தேவை. மட்டுமின்றி, இண்டிகோ நிறுவனம் ஒவ்வொரு மாதமும் 20 – 25 முதல் அதிகாரிகளை விமானி அந்தஸ்துக்கு பதவி உயர்வும் அளிக்கவிருக்கிறது.

2,422 விமானிகள் தேவை

ஒரு பயிற்சி அதிகாரி விமானியாக மாற ஆறு மாதங்கள் ஆகும். ஒருவர் விமானி பொறுப்புக்கு வர 1,500 மணிநேர விமானப் பறத்தல் அனுபவம் தேவை.

நிறுவனம் இந்த தரநிலைகளை கடுமையாக்க இருக்கிறது. விதிமுறைகளின்படி, ஒவ்வொரு விமானத்திலும் மூன்று விமானிகள் (ஒரு விமானி மற்றும் ஒரு முதல் அதிகாரி) இருக்க வேண்டும்.

இருப்பினும், இண்டிகோவின் விமானங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால் நிலையான எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு விமானிகள் தேவைப்படுகிறார்கள்.

ஒவ்வொரு மாதமும் நான்கு புதிய விமானங்கள்... 1000 விமானிகளைப் பணியமர்த்தும் இந்திய நிறுவனம் | Indigo To Recruit En Masse

ஒரு விசாரணையில், இண்டிகோ நிறுவனத்திற்கு 2,422 விமானிகள் தேவை என்று கண்டறியப்பட்டது, ஆனால் அந்த நேரத்தில், அந்த நிறுவனத்தில் 2,357 விமானிகள் மட்டுமே இருந்தனர்.

நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, பிப்ரவரி 10 வரை இரவு நேரக் கடமை விதிமுறைகளில் சில தற்காலிக தளர்வுகளை DGCA வழங்கியது.

இதனையடுத்து புதிய விமானிகள் ஓய்வு விதிகள் டிசம்பரில் செயல்படுத்தப்பட்டன. இந்த விதிகளின் கீழ், நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை தரையிறங்கும் எண்ணிக்கை குறைவாக இருந்தது மற்றும் வாராந்திர ஓய்வு காலம் நீட்டிக்கப்பட்டது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *