ஒரே ஒப்பந்தத்தில் சொத்து மதிப்பு ரூ.60,510 கோடி உயர்வு., டிக்-டொக் பிரபலத்தை நம்பி முதலீட்டாளர்கள் இழப்பு

1 Min Read

டிக்-டொக் பிரபலம் காபி லேம் (Khaby Lame) தொடர்பான பங்குச் சந்தை அதிர்ச்சி உலகம் முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது.

காபி லேம் உருவாக்கிய Step Distinctive Limited நிறுவனத்தை Rich Sparkle Holdings நிறுவனம் 975 மில்லியன் டொலருக்கு வாங்கியது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தால் அவரது சொத்து மதிப்பு ரூ.60,510 கோடி வரை உயர்ந்தது.

இதனால் முதலீட்டாளர்கள் அதிக எதிர்பார்ப்புடன் அந்த பங்குகளை வாங்கியுள்ளனர். ஆனால் சில நாட்களிலேயே சந்தை மோசடி குற்றச்சாட்டுகள் எழுந்ததால் பங்குகள் 77 சதவீதம் வீழ்ச்சி அடைந்ததால் சந்தையில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

முதலீட்டாளர்கள் பெரும் இழப்பை சந்தித்தனர். சமூக ஊடகங்களில் இதுகுறித்து கடும் விமர்சனங்கள் எச்சுந்துள்ளன.

இந்த சம்பவம் சந்தை மோசடி குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

Khaby Lame net worth, Khaby Lame stock crash, Khaby Lame deal 2026, Market manipulation news, Celebrity net worth India, Khaby Lame latest news, TikTok star Khaby Lame wealth, Khaby Lame financial controversy, Stock market crash influencer, Khaby Lame trending

பிரபலங்களின் பெயரை பயன்படுத்தி பங்குகளை உயர்த்தும் நடைமுறை குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

காபி லேம் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தாலும், அவர் நேரடியாக சம்பந்தப்பட்டாரா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை.

இந்தச் சம்பவம், பங்குச் சந்தையில் பிரபலங்களின் செல்வாக்கு எவ்வளவு ஆபத்தானது என்பதை வெளிப்படுத்துகிறது.

முதலீட்டாளர்கள் பிரபலங்களின் பெயர், சமூக ஊடக ஹைப் ஆகியவற்றை மட்டும் நம்பாமல், நிதி அடிப்படைகளை ஆராய்ந்து முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கான பாடமாகும்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *