சிலாபத்தில் 60 லீற்றர் சட்டவிரோத மதுபானம், 570 லீற்றர் கோடாவுடன் 64 வயது நபர் கைது!

Admin
By
Admin
1 Min Read

சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகுனுவடவன பகுதியில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், பெருந்தொகையான சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிலாபம் ஊழல் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, நேற்று சனிக்கிழமை (03) நண்பகல் வேளையில் இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, 60 லீற்றர் சட்டவிரோத மதுபானம் (80 போத்தல்கள்) மற்றும் மதுபானம் காய்ச்சுவதற்காகப் பயன்படுத்தப்படும் 570 லீற்றர் கோடா என்பன கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபர் கைது செய்யப்பட்டு மேலதிக நடவடிக்கைகளுக்காகச் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சிலாபம் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய வயோதிபர் ஒருவர் ஆவார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *