நியூயோர்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் ஒருவரைக் கத்தியால் குத்திக்கொன்ற பெண்ணை பொலிஸார் சுட்டுக்கொன்றனர்.
கடந்த திங்கட்கிழமை (31) நடந்த சம்பவத்தில் அந்தப் பெண் இன்னொருவரையும் காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. பெண் இரண்டு கத்திகளை வைத்திருந்ததாகச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறினார்.
பொலிஸார் அவரை அதிர்வுக்கருவியால் கட்டுக்குள் கொண்டுவந்ததாக அவர் குறிப்பிட்டார். அதிகாரிகள் பெண்ணை இரண்டு முறை சுட்டதாகவும் அவர் தெரிவித்தார். சுடப்பட்ட பெண் மிக மோசமான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக உள்ளூர்த் தகவல்கள் தெரிவித்தன. டைம்ஸ் சதுக்கத்தில் இரத்தக்கறை படிந்த இடத்தை அதிகாரிகள் ஆய்வுசெய்ததாகச் சம்பவத்தை நேரில் பார்த்த ஏ.எப்.பி. நிறுவனத்தின் செய்தியாளர் தெரிவித்தார். காயமடைந்தவரின் உடல்நிலை சீராய் இருப்பதாக நியூயோர்க் நகர மேயர் ஸோரான் மம்தானி செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
கத்திக்குத்துச் சம்பவம் பயங்கரவாதம் தொடர்பானதல்ல என்று பொலிஸார் நம்புகின்றனர். விசாரணை தொடர்கிறது.




