அமெரிக்காவை விட்டுப் புறப்பட்ட இந்திய தம்பதி: பக்கத்து வீட்டுப் பெண் செய்த செயல்

1 Min Read

மெரிக்காவில் வாழ்ந்துவந்த ஒரு இந்திய தம்பதி அமெரிக்காவை விட்டு இந்தியாவுக்கு புறப்பட்ட நிலையில், பக்கத்து வீட்டுப் பெண்ணொருவர் அவர்களைக் கட்டியணைத்து அழுது விடைகொடுக்கும் காட்சி ஒன்று நெகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.

அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் பலர் இனவெறுப்பு சம்பவங்களை எதிர்கொள்ளும் காட்சிகளை இணையத்தில் பார்த்திருப்போம்.

ஆனால், தங்கள் வீட்டுக்கு அருகில் வாழ்ந்துவந்த ஒரு இந்திய தம்பதியரைப் பிரிய மனமில்லாமல் அமெரிக்கப் பெண்மணி ஒருவர் கண்ணீர் விடும் காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவை விட்டுப் புறப்பட்ட இந்திய தம்பதி: பக்கத்து வீட்டுப் பெண் செய்த செயல் | Us Woman Breaks Down For Indian Neighbours

 

பக்கத்து வீட்டுப் பெண் செய்த செயல்

அமெரிக்காவில் வாழ்ந்து வந்த அந்த இளம் தம்பதியர் இந்தியாவுக்கே திரும்ப முடிவு செய்து இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளனர்.

அப்போது, அவர்களுடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்மணி, அவர்களுக்கு பிரியாவிடை கொடுக்க வந்துள்ளார்.

அவர்கள் விடைபெற்றுக்கொண்டு செல்ல முயல, அவர் அவர்கள் தோள் மீது சாய்ந்துகொண்டு அழத் துவங்கியுள்ளார்.

அவர்கள் இருவரும் அவருக்கு ஆறுதல் கூறியும் அவரால் அவர்களை விட முடியவில்லை.

அவர்களைக் கட்டியணைத்துக்கொண்டு உங்களை நான் எவ்வளவு மிஸ் பண்ணுவேன் தெரியுமா என கேட்டு மேலும் கண்ணீர் வடித்துள்ளார் அவர்.

கடைசியாக, அந்த தம்பதியருக்காக பிரார்த்தனை செய்து அவர்களை அனுப்ப மனமில்லாமல் அனுப்பிவைத்துள்ளார் அந்த அமெரிக்கப் பெண்மணி.இதில் முக்கிய விடயம் என்னவென்றால், இந்தக் காட்சிகள் வீடியோவாக எடுக்கப்படுவது அந்தப் பெண்மணிக்கோ அல்லது அந்த தம்பதியருக்கோ தெரியாது. நண்பர் ஒருவர் யாருக்கும் தெரியாமல் அந்த வீடியோவை எடுத்துள்ளார்.

ஆக, உண்மையாகவே அந்த தம்பதியரும் அந்த அமெரிக்கப் பெண்மணியும் ஒருவரையொருவர் அவ்வளவு நேசித்துள்ளார்கள் என்பது அந்த வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.

வீடியோவைப் பார்வையிட்ட பலரும் நெகிழ்ந்துபோன நிலையில், இதேபோல் நல்ல அயலகத்தாரை பிரிந்து வந்த சிலர் தங்களுக்கும் இதேபோன்ற அனுபவங்கள் ஏற்பட்டதாகவும், பிரிந்த பின்பும் தங்கள் அயலகத்தாருடனான அன்பு நீடிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *