ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் ஸ்ரீலங்காவின் செல்வம் மற்றும் தனிநபர் வங்கிச்சேவை வணிகத்தை கையகப்படுத்தும் பணியை DFCC வங்கி நிறைவு செய்துள்ளது.
தொடர்ச்சி, பழக்கமான உறவுகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சேவை உதவியை மையமாகக் கொண்டு கவனமாகத் திட்டமிடப்பட்ட மாற்றத்தை முன்னெடுத்து, வாடிக்கையாளர்களை வரவேற்கிறது.
ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி ஸ்ரீலங்காவின் செல்வம் மற்றும் தனிநபர் வங்கிச்சேவை வணிகத்தை கையகப்படுத்தும் பணியை நிறைவு செய்துள்ளதாக DFCC வங்கி பிஎல்சி அறிவித்துள்ளது.
சுமார் 50,000 வாடிக்கையாளர்கள், இந்த வணிகத்தைச் சேர்ந்த சக ஊழியர்களுடன் சேர்ந்து, தற்போது DFCC வங்கியில் இணைந்துள்ளனர்.
இந்த பரிவர்த்தனையானது முன்னுரிமை வங்கிச் சேவை, கடன் அட்டைகள், தனிநபர் கடன் வழங்கல், வைப்புக்கள், செல்வ முகாமைத்துவம் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஆகிய பிரிவுகளில் உள்ள வாடிக்கையாளர் பிரத்தியேக சேவைகளையும், தேர்ந்தெடுக்கப்பட்ட செயல்பாட்டுச் சொத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது.
இது DFCC வங்கியின் தனிநபர், செல்வ முகாமைத்துவம், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சார்ந்த திறன்களை வலுப்படுத்துவதோடு, இந்த வணிகங்களின் அளவையும் பரவலையும் விரிவுபடுத்துகிறது.
இந்தப் பணியின் நிறைவு குறித்துக் கருத்துத் தெரிவித்த DFCC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி திமால் பெரேரா, “ஆரம்பத்திலிருந்தே, வாடிக்கையாளர்களுக்கு இந்த மாற்றத்தை முடிந்தவரை தங்குதடையற்றதாகவும், பழக்கமானதாகவும் மாற்றுவதில் எங்கள் கவனம் இருந்தது.




