அடுத்தாண்டு இறுதிக்குள் 5 கோடி மக்களை கடும் பட்டினிக்குள் தள்ளும் எல் நினோ

1 Min Read

வேகமாக உருவாகிவரும் எல் நினோ வானிலை காரணமாக, அடுத்தாண்டு இறுதிக்குள் சுமார் 5 கோடி மக்கள் கடுமையான பட்டினியில் தள்ளப்பட வாய்ப்புள்ளது என முன்னறிவிப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தற்போது கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ள 45 நாடுகளின் நிலைமை மோசமடையும் என ஐக்கிய நாடுகள் வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர். ஆபிரிக்காவின் சில பகுதிகளில் பல ஆண்டுகளாக நிலவும் வரட்சியும் ஈரான் மீதான போரினால் உணவுப் பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள அழுத்தமும், ஏற்கனவே அபாயகரமான பட்டினி நிலையை எதிர்கொண்டுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு, எல் நினோவின் தாக்கம் பாதிப்புக்களை மேலும் அதிகரிக்க வழிவகை செய்யும்.

ஏற்கனவே எதிர்வுகூறப்பட்டதை விடவும் குறைந்த மட்டத்தில் எல் நினோ வலுவடைந்து வந்தாலும், அது பல நாடுகளை விளிம்பு நிலைக்குத் தள்ளிவிடும் அபாயமும் காணப்படுகிறது. அதனால் தற்போது கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையில் உள்ள 45 நாடுகளில் வாழும் 22.5 கோடி மக்களுடன் மேலும் ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் இணைய முடியுமென ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் நேற்று எச்சரித்தது. த கார்டியன்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *