ஆங்கில கால்வாயை கடக்க முயன்ற படகில் தீ; 157 பேர் மீட்பு

0 Min Read

ஆங்கிலக் கால்வாயைக் கடக்கப் பயன்படுத்தப்பட்ட படகு நேற்று காலை தீப்பிடித்ததைத் தொடர்ந்து, அப்படகில் இருந்த 150 இற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டதாக பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த படகு இங்கிலாந்திற்குள் நுழைய முயன்றபோது அதன் இயந்திரத்தில் தீப்பிடித்ததாக வடகடல் மற்றும் பிரெஞ்சு கடல்சார் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இப்படகில் இருந்து 157 பேர் மீட்கப்பட்டு, பௌலோன்-சுர்-மெர் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர்களில் எவரும் காயமடைந்ததாகவோ அல்லது உயிரிழந்ததாகவோ தகவல்கள் இல்லை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அப்படகு பிரான்சிலிருந்து நேற்று முன்தினமிரவு புறப்பட்டதாக பிரெஞ்சு அதிகாரிகள் கூறினர். பி.பி.சி

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *