பப்புவா நியூகினியாவிலிருந்து சில திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு கொள்முதல் செய்வதை தாய்வான் இடைநிறுத்தியுள்ளது.
பப்புவா நியூகினியாவின் வெளியுறவு அமைச்சர் ஜஸ்டின் ட்காட்சென்கோ, தனது நாட்டின் ஒரே சீனா கொள்கையை அங்கீகரிக்கும் விதமாக தாய்வானின் தூதரகத்தை பப்புவா நியூ கினியா உடனடியாக மூடும் என்று இம்மாத தொடக்கத்தில் அறிவித்தது. அதற்கு தாய்வான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில் பப்புவா நியூகினியாவுடனான தனது எரிவாயு ஒப்பந்தங்களைத் திருத்தி அமைக்கப்போவதாகவும் தாய்வான் குறிப்பிட்டது. அதில், ஒவ்வொரு ஆண்டும் 1.2 மில்லியன் தொன் திரவ இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான 2030 வரையிலான நீண்ட கால ஒப்பந்தமும் உள்ளடக்கப்படும் எனவும் தாய்வான் கூறியது.
இந்நிலையில் தாய்வான் வெளியுறவு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் கூறுகையில், பப்புவா நியூ கினியாவின் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை திறந்த சந்தையில் தனித்தனியாக கொள்முதல் செய்வதை உடனடியாக நிறுத்தி வைப்பதாக நேற்று முன்தினம் அறிவித்தார். எனினும் தாய்வான் அந்த ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. ஏ.பி.சி நியூஸ்




