பாகிஸ்தான் நிர்வாகத்திலுள்ள காஷ்மீரில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தேர்தல் நடைபெற்ற நிலையில், இடம்பெற்றுள்ள துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட சிவில் உரிமை அமைப்பின் ஆதரவாளர்கள் ராவலாகோட்டில் நடத்திய ஊர்வலத்தின் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளதாகவும், இத்தேர்தலையொட்டி கடந்த திங்களன்று சுமார் 25 பேரும், நேற்று முன்தினம் மேலும் ஐவரும் கொல்லப்பட்டதாகவும் அவாமி அதிரடிக் குழு குறிப்பிட்டுள்ளது. பாகிஸ்தான் முழுவதும் வசிக்கும் இந்திய நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீர் அகதிகளுக்கு பிராந்திய சட்டமன்றத்தில் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு உள்ளுர் குழுக்கள் கடந்த மாதம் முதல் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு அந்த இடங்களை இரத்து செய்யவும் கோரி ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்தன. இந்த இட ஒதுக்கீடு வெளியாட்களுக்கு இப்பகுதியின் மீது அதிகக் கட்டுப்பாட்டை அளிக்கும் என்று கூறும் இக்குழுக்கள் அது தொடர்பான தேர்தலுக்கும் ஆட்சேபனை தெரிவித்தன. அந்த தேர்தலின் முதல் கட்டம் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் திங்களன்று நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தவர்கள் மீது கடந்த இரண்டு நாட்களாக துப்பாக்கிப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்ட போதே இவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அக்குழுவினர் கூறியுள்ளனர். இந்நிலையில் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு, போராட்டக்காரர்களுக்கு எதிராகப் பலத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து, சுதந்திரமானதும் வெளிப்படையானதுமான விசாரணையை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளதோடு அப்பகுதிக்கான இணைய சேவையை மீண்டும் வழங்குமாறும் கோரியுள்ளது. த கார்டியன், இன்டிபென்டன்.
பாகிஸ்தான் காஷ்மீரில் துப்பாக்கி சூடு: 30 பேர் பலி

By

Leave a Comment


Subscribe to our newsletter to get our newest articles instantly!
Most Read
- Advertisement -
