தென் கொரிய ஜனாதிபதிக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறை

1 Min Read

ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது தவறான அறிக்கைகளை வெளியிட்டு தேர்தல் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக, தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் யோலுக்கு 18 மாத சிறைத் தண்டனை தென் கொரிய நீதிமன்றத்தினால் நேற்று விதிக்கப்பட்டது,

இது மூன்று ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மேல்முறையீடுகள் மூலம் இத்தண்டனை உறுதி செய்யப்பட்டால், யூனின் மக்கள் சக்தி கட்சி, அவரது ஜனாதிபதி தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து தேசிய தேர்தல் ஆணைக்குழுவினால் திருப்பிச் செலுத்தப்பட்ட 27.1 மில்லியன் டொலர் தேர்தல் செலவுகளை மீள வழங்கப்பட வேண்டிய நிலை வரலாம்.

2022 ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது, ​​முன்னாள் வரி அதிகாரியொருவருக்கு ஒரு வழக்கறிஞரை அறிமுகப்படுத்தியதை மறுத்ததன் மூலமும், யூனும் அவரது மனைவியும், முன்னாள் முதல் பெண்மணியுமான கிம் கியோன் ஹீயும், சாமன் ஜியோன் சியோங்-பேவை சந்திக்கவில்லை என்று கூறியதன் மூலமும் யூன் தவறான அறிக்கைகளை வெளியிட்டதாக சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் கண்டறிந்தமை குறிப்பிடத்தக்கது.

         ரொய்ட்டர்ஸ்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *