சமூக ஊடக அணுகலில் 6.3 கோடி பயனாளர்களைக் கடந்து சாதனை

2 Min Read

பரந்தளவில் மக்களைச் சென்றடையும் சமூக ஊடக அமைப்பை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உருவாக்கியுள்ளது.  Facebook, YouTube, TikTok மற்றும் Instagram உள்ளிட்ட முக்கிய சமூக ஊடக தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் டிஜிட்டல் தொடர்பாடல் நடவடிக்கைகள் மூலம் இச்சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இந்த சமூக ஊடக தளங்கள் வழியாக வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்ப்போர், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் ஏனைய பங்குதாரர்களுக்கு காலத்திற்கேற்ற நம்பகமான தகவல்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

2025 ஆம் ஆண்டில், பணியகத்தின் Facebook, YouTube, TikTok மற்றும் Instagram ஆகிய அனைத்து சமூக ஊடக தளங்களின் மொத்த அணுகல் (Total Social Media Reach) 6.3 கோடியை (63 மில்லியன்) கடந்துள்ளது.

இது அரச நிறுவனமொன்றின் டிஜிட்டல் தொடர்பாடல் துறையில் குறிப்பிடத்தக்க சாதனையாகக் கருதப்படுகிறது.மேலும், 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் இந்த சமூக ஊடக தளங்கள் ஊடாக 3.3 கோடிக்கும் (33 மில்லியன்) அதிகமான மக்களைச் சென்றடைந்துள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த சாதனையின் மூலம், சமூக ஊடகங்கள் வழியாக பொதுமக்களுடன் விரிவான தகவல் தொடர்பை பேணும் முன்னணி அரச நிறுவனமாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் திகழ்கிறது.

பணியகத்தின் சமூக ஊடகங்களில் பாதுகாப்பான வெளிநாட்டு வேலைவாய்ப்புகள், சட்டபூர்வமான வேலைவாய்ப்பு நடைமுறைகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகப் பதிவு,  ஆட்கடத்தல்களைத் தடுத்தல், வெளிநாட்டு தொழிலாளர் நலச் சேவைகள், இழப்பீடு மற்றும் காப்புறுதி நலன்கள், பயிற்சி நிகழ்ச்சிகள், அவசர பொதுமக்கள் அறிவிப்புகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வெளியிடப்படுகின்றன.  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் முன்னெடுத்து வரும் இந்த டிஜிட்டல் தொடர்பாடல் வேலைத்திட்டம், பொதுமக்கள் தொடர்பு, அரச சேவைகள் தொடர்பான விழிப்புணர்வு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு தகவல் பரவல் மற்றும் அவசர அறிவிப்புகளை விரைவாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் டிஜிட்டல் ஊடகங்களை எவ்வாறு வெற்றிகரமாகப் பயன்படுத்தலாம் என்பதற்கான சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்  தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *