இம்மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள லங்கா பிறீமியர் லீக் தொடரை பிரபல விளையாட்டுத் தொலைக்காட்சியான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதில் முன்னணி ஒளிபரப்புச் சேவையாக இருக்கும் ஸ்டார் ஸ்போட்ஸ் எல்.பி.எல். தொடரை ஒளிபரப்பும் உரிமையை பெற்றிருப்பது இது மூன்றாவது முறையாகும். முன்னதாக 2023 மற்றும் 2024இல் நடைபெற்ற எல்.பி.எல். தொடரை, இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்காளதேஷ், பூட்டான், நேபாளம், மாலைதீவுகள் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியம் உள்ளிட்ட நாடுகளில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பியது. ஆறாவது லங்கா பிரீமியல் லீக் தொடரில் ஐந்து அணிகள் பங்கேற்றிருப்பதோடு 24 போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடர் எதிர்வரும் ஓகஸ்ட் 8 ஆம் திகதி வரை நடைபெறும்.
லங்கா பிறீமியர் லீக் ஸ்டார் ஸ்போர்ட்ஸில்

By

Leave a Comment


Subscribe to our newsletter to get our newest articles instantly!
Most Read
- Advertisement -
