போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனின் மீட்புக்காக 3.4 பில்லியன் டொலரை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியுள்ளது. உக்ரைனின் மீட்சிக்கு இரு வருடங்களுக்கென 101 பில்லியன் டொலரை கடனாக வழங்கும் திட்டத்தின் கீழ் முதல் தவணையாக 3.4 பில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளதாக உக்ரைன் பிரதமர் யூலியா ஸ்விரிடென்கோ நேற்றுத் தெரிவித்தார். போலந்தில் உக்ரைனின் போருக்குப் பிந்தைய மீட்பு குறித்த மாநாட்டின் தொடக்க விழாவில் இது தொடர்பில் அவர் அறிவித்தார். ஜெர்மன் அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் உள்ளிட்ட முக்கிய ஐரோப்பியத் தலைவர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர். போரினால் பாதிக்கப்பட்ட தனது நாட்டிற்கு உறுதியளிக்கப்பட்ட ஆதரவுக்கு உக்ரைன் நன்றியுள்ளதாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஏ.பி. நியூஸ்
போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு 3.4 பில். டொலர் வழங்கிய ஐரோப்பா

By

Leave a Comment


Subscribe to our newsletter to get our newest articles instantly!
Most Read
- Advertisement -
