சட்டமன்றத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், கூட்டணி இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டதால் விசிக, ஐயுஎம்எல் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவோடு விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார். இந்த ஆட்சி மாற்றத்திற்கு இடையே, கூட்டணி தலைவர்களை தவெக தலைவர் நேரில் சந்தித்துப் பேசுவதற்கு முன்பாகவே, சோபாக்கள் முன்னதாகவே அவர்களின் கட்சி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்தச் சம்பவத்தைக் கடுமையாக சாடிவரும் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தற்போதைய தவெக ஆட்சியை “சோபா மாடல் அரசு” என்று விடாமல் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் 3 நாட்களுக்கு முன்பு, தனியார் செய்தி ஊடக நேர்க்காணலில் பங்கேற்றிருந்தார் அமைச்சர் வன்னியரசு.. அப்போது பேசும்போது “தவெக அரசு சோபா மாடல் அரசுதான், S-Social Justice, O-Organised Action, F-Freedom, A-Anti Corruption & Caste இதுதான் SOFAவுக்கு விளக்கம்” என்றெல்லாம் கூறியிருந்தார். வன்னி அரசு தந்த சூப்பர் விளக்கம் அதுமட்டுமல்ல, முதல்வர் விஜய் விமர்சனங்களுக்கு பதில் சொல்வதை விட தனது செயலில் அந்த பதிலை காட்டுகிறார். கடந்த திமுக அரசின் நிலைப்பாடுகள் தவெக அரசிலும் தொடர்கின்றன.




