உடனடி போர் தயார்நிலை பயிற்சியொன்றை இன்று முதல் ஐந்து நாட்களுக்கு நடத்துவதற்கு தாய்வான் ஏற்பாடு செய்துள்ளது.
ஆயுதப் படைகளுக்கான கூட்டு பயிற்சித் திட்டங்களின் ஒரு பகுதியாக இப் போர்ப் பயிற்சி அமையும் என்று தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தயார்நிலை வரிசைப்படுத்தலின் போது, அனைத்து மட்டங்களிலுமுள்ள படைப்பிரிவுகள் போர் நடைமுறைகள் மற்றும் போர்க்களச் சூழலுடன் நன்கு பழக்கப்படுவதற்கு பயிற்சி அளிப்பதே இதன் முக்கிய நோக்கம், என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
தங்களுக்கு அருகிலுள்ள வான்வெளியில் சீனா அதிக எண்ணிக்கையிலான இராணுவ விமானங்களை அனுப்புவதாகக் குற்றம்சாட்டியுள்ள தாய்வான் பாதுகாப்பு அமைச்சு, தங்கள் கடல் எல்லைப் பகுதிகளில் இரண்டு சீன இராணுவ விமானங்கள், எட்டு கடற்படைக் கப்பல்கள் மற்றும் நான்கு கப்பல்களின் செயல்பாடுகளை நேற்று அவதானித்ததாகவும் தெரிவித்துள்ளது. ரொய்ட்டர்ஸ்




