தேயிலையின் உலகளாவிய பிறப்பிடம்

1 Min Read
சீனாவின் தென்மேற்கு எல்லையில் அமைந்துள்ள புவெர் பிராந்தியம், உலகின் மிகப்பழமையான மற்றும் தனித்துவமான தேயிலை கலாச்சாரத்தைக் கொண்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும்.
இது யுன்னான் மாகாணத்தின் பிரதான நகரமான குன்மிங்கில் இருந்து தெற்கு நோக்கிச் சுமார் 400 கி.மீ தொலைவில், அடர்ந்த காடுகளும் மலைகளும் சூழ்ந்த இதமான காலநிலை கொண்ட பகுதியில் அமைந்துள்ளது.
உலகளவில் நொதித்தல் முறையில் (Fermentation) தயாரிக்கப்படும் மருத்துவக் குணங்கள் நிறைந்த ‘புவெர் தேயிலை’ முதன்முதலில் பயிரிடப்பட்டு, பதப்படுத்தப்பட்ட இடமாக இப்பிராந்தியம் அடையாளப்படுத்தப்படுகிறது. இங்கு 1000ஆண்டுகளுக்கும் மேல் பழமையான தேயிலை மரங்கள் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
வரலாற்றுச் சிறப்புமிக்க ‘பண்டைய தேயிலை-குதிரை வழித்தடத்தின்’ மிக முக்கிய மையப்புள்ளியாக புவெர் விளங்கியதுடன், இங்கிருந்துதான் திபெத், இந்தியா மற்றும் பிற ஆசிய நாடுகளுக்குத் தேயிலை வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டது.
இயற்கை எழில், பழங்குடியின கலாச்சாரம் மற்றும் தேயிலை விவசாயம் ஆகியவற்றின் சங்கமமாக விளங்கும் புவெர் பிராந்தியம், இன்று சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் சுற்றுலாப் பயணிகளையும்தேயிலை ஆராய்ச்சியாளர்களையும் ஈர்க்கும் முக்கிய தலமாகத் திகழ்கிறது.
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *