ஞாயிறன்று யாழ். ஒற்றுமை கிண்ண கிரிக்கெட் போட்டி

1 Min Read

நியூ ஸ்டார் விளையாட்டு கழகமும், அரியாலை மத்திய விளையாட்டு கழகமும் இணைந்து நடாத்தும் ‘ஒற்றுமை கிண்ணத்துக்கான’ 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. யாழ். ஊடக மையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே போட்டி ஏற்பாட்டாளர்கள் இந்த விபரங்களை உத்தியோகபூர்வமாக வெளியிட்டனர்.

இவ் ஊடக சந்திப்பில் ஏற்பாட்டாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில், பிராந்திய வீரர்களின் தனித்துவமான ஆட்டத் திறமைகளை வெளிப்படுத்தும் நோக்கிலேயே கழக மட்டத்தில் இப்போட்டி மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டனர். அத்துடன், நடப்பு ஆண்டு முதல் இந்த ‘ஒற்றுமை கிண்ண’ கிரிக்கெட் போட்டியை இரு கழகங்களுக்கும் இடையில் ஆண்டுதோறும் தொடர்ச்சியாக நடாத்துவதற்குக் கூட்டு இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தின் விளையாட்டு ஆர்வலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டியினைக் கண்டு களித்து, வீரர்களை உற்சாகப்படுத்துமாறு கிரிக்கெட் இரசிகர்களுக்கு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *