வெளிநாட்டு வேலைவாய்ப்புகளால் அந்நிய செலாவணி வருவாய் அதிகரிப்பு

1 Min Read

கடந்த மே மாதத்தில் பெற்றுக் கொண்டுள்ள மொத்த வெளிநாட்டுப் பணப் பரிமாற்றம் 847 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களிடமிருந்து கடந்த மே மாதத்தில் பெற்றுக் கொண்டுள்ள மொத்த வெளிநாட்டுப் பணப் பரிமாற்றம் 847 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2025 மே மாதத்தில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள 641.7 மில்லியன் அமெரிக்கன் டொலருடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் மே மாதத்தில் பணப் பரிமாற்ற வருமானம் 205.3 மில்லியன் அமெரிக்கன் டொலராக அதிகரித்துள்ளது. 2026 ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களால் நாட்டிற்கு அனுப்பப்பட்ட மொத்த வெளிநாட்டுப் பணப் பரிமாற்றத் தொகை 3.90 பில்லியன் அமெரிக்கன் டொலராக அதிகரித்துள்ளது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *