இந்தியாவில் மிக நீண்ட காலம் பதவி வகித்த பிரதமராகிறார் மோடி

1 Min Read

இந்தியாவின் பிரதம​ராக முதன்​முதலில் 2014 மே 26ஆம் திகதி நரேந்​திர மோடி பதவி​யேற்​றார். அவர் எதிர்வரும் ஜூன் 10ஆம் திகதி தொடர்ச்​சி​யாக 4,399 நாட்​களை பதவி​யில் நிறைவு செய்யவுள்​ளார்.

இதன் மூலம் இந்​தி​யா​வின் முதல் பொதுத் தேர்​தலுக்​குப் பிறகு 1952 மே 13ஆம் திகதி பதவி​யேற்​று, மறை​யும் வரை (1964 மே 27 வரை) 4,398 நாட்​கள் பிரதம​ராக இருந்த ஜவஹர்​லால் நேரு​வின் சாதனையை மோடி முறியடிக்க உள்​ளார். இந்த மைல்​கல் மோடியின் அரசி​யல் வாழ்க்​கை​யில் மற்​றொரு வரலாற்​றுச் சாதனை​யாகும். முன்​னாள் பிரதமர் இந்​திரா காந்​தி​யின் மிக நீண்ட, தொடர்ச்​சி​யான பதவிக்​ கால சாதனையை அவர் ஏற்கெனவே கடந்த 2025 ஜூலை 25ஆம் திகதி முறியடித்​திருந்​தார். இந்​திரா காந்தி 1966 ஜனவரி 24 முதல் 1977 மார்ச் 24 வரை தொடர்ச்​சி​யாக 4,077 நாட்​கள் பிரதம​ராகப் பணி​யாற்​றி​னார். சுதந்​திரத்​திற்கு பிந்​திய தொடக்க ஆண்​டு​களில் நாட்டை நேரு வழி நடத்​தி​ய​போது, இந்​தி​யா​வின் மக்​கள் தொகை சுமார் 34 கோடி​யாக இருந்​தது. 2014-ல் மோடி பதவி​யேற்​ற​போது மக்​கள் தொகை 131 கோடியை தாண்​டியது. தற்​போது அது 146 கோடிக்கும் அதி​க​மாக உயர்ந்​துள்​ளது. 1951- 52இல் நாட்​டின் முதல் பொதுத் தேர்​தலில் 53 அரசி​யல் கட்​சிகள் போட்​டி​யிட்ட நிலை​யில், இந்த எண்​ணிக்கை 2014ல் 464 ஆக உயர்ந்​து, 2024 மக்​கள​வைத் தேர்​தலில் 744ஐ எட்​டியது. முதல் பொதுத் தேர்​தலில் வாக்​காளர் எண்​ணிக்கை சுமார் 17 கோடி​யாக இருந்த நிலை​யில் இது 2014க்​குள் 83 கோடிக்​கும் அதி​க​மாக வளர்ந்​திருந்​தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *