பயன்படுத்தப்பட்ட மூன்று நீர்மூழ்கிக் கப்பல்களை அமெரிக்காவிடமிருந்து வாங்க அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது.
ஆகஸ் மாற்றத்தின் கீழ், பயன்படுத்தப்பட்ட வேர்ஜீனியா-வகை நீர்மூழ்கிக் கப்பல்கள் மாத்திரம் கொள்வளவு செய்யப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ் கூறியுள்ளார்.
2021 இல் மேற்கொள்ளப்பட்ட ஆகஸ் ஒப்பந்தத்தின் கீழ், அவுஸ்திரேலியா குறைந்தபட்சம் இரண்டு பயன்படுத்தப்பட்ட மற்றும் ஒரு புதிய வேர்ஜீனியா-வகை நீர்மூழ்கிக் கப்பலைப் வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகள் இந்த கொள்முதலை சீராக்குவதாக நேற்று முன்தினம் அறிவித்தன. அவுஸ்திரேலியா இனி எந்த புதிய வகை நீர்மூழ்கிக் கப்பலையும் வாங்காது. ஒரே உற்பத்தித் தொகுதியிலிருந்து மூன்று பயன்படுத்தப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாம் வாங்கும் வேர்ஜீனிய நீர்மூழ்கிக் கப்பல்கள் அனைத்தும் ஒரே வகையைச் சேர்ந்தவையாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். அவுஸ்திரேலிய மூலோபாயக் கொள்கை நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் மால்கம் டேவிஸ், ஒரே வகையான மூன்று நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெறுவதில் நன்மைகள் இருக்கும் என்று மார்லஸ் கூறியது சரியானது என்றுள்ளார். ஏ.பி.சி நியூஸ்



