20,000 குழந்தைகள்..நீதா அம்பானியின் நெகிழ்ச்சி செயலுக்கு குவியும் பாராட்டு

1 Min Read

வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளை போட்டியை காண அழைத்து வந்த நீதா அம்பானியின் முன்னெடுப்பு பாராட்டுகளை பெற்று வருகிறது.

நீதா அம்பானி

வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் போட்டியை காண, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் முழுவதும் உள்ள பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த சுமார் 20,000 குழந்தைகளை நீதா அம்பானி அழைத்து வந்துள்ளார்.

ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இணைந்து நடத்தும் வருடாந்திர ‘அனைவருக்குமான கல்வி மற்றும் மற்றும் விளையாட்டு’ (ESA) முன்னெடுப்பின் ஒரு பகுதியாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

தற்போது 16வது ஆண்டில் இருக்கும் ESA, ஐபிஎல்-யின் நீண்டகாலமாக இயங்கிவரும் மற்றும் மிகவும் கவனிக்கத்தக்க சமூக தாக்கத் திட்டங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

குழந்தைகளுக்காகவே

இதில், போட்டி நடைபெறும் நாள் முழுவதும் பிரத்யேகமாகக் குழந்தைகளுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. எனவே இப்போட்டிக்கு நுழைவுச்சீட்டுகள் விற்கப்படுவதில்லை.

Nita ambani with 20000 special children

தேசிய பார்வையற்றோர் சங்கத்தைச் சேர்ந்த 95 பார்வைக் குறைபாடு உள்ள குழந்தைகளும், அவர்களுடன் வரும் 35 செவித்திறன் உதவியாளர்களும் உட்பட 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் இதில் கலந்துகொண்டனர்.

பங்கேற்கும் குழந்தைகளுக்கு, தங்கள் கிராமத்தை விட்டு வெளியே செல்லும் முதல் பயணம், மும்பைக்கு முதல் வருகை, ஒரு மைதானத்திற்குள் முதல் முறையாக நுழைவது மற்றும் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களை நேரடியாகப் பார்க்கும் முதல் வாய்ப்பு என இன்று அமைந்தது.

 

Nita ambani with 20000 special children

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *