உயிரிழந்த மகள் உடலை நான்கு மாதங்களாக வீட்டுக்குள் வைத்திருந்த தந்தை

1 Min Read

இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில், தந்தை ஒருவர், உயிரிழந்த தன் மகளுடைய உடலை நான்கு மாதங்களாக வீட்டுக்குள் பூட்டிவைத்திருந்தது தெரியவந்துள்ளது.

நான்கு மாதங்கள் வீட்டுக்குள்ளிருந்த உடல்

உத்தரப்பிரதேசத்திலுள்ள Teli Mohalla என்னுமிடத்தைச் சேர்ந்த உதயபானு பிஸ்வாஸ் (72) என்பவரின் மகள் பிரியங்கா (35).

உயிரிழந்த மகள் உடலை நான்கு மாதங்களாக வீட்டுக்குள் வைத்திருந்த தந்தை | Up Man Keep Daughter Body At Home Dor 4 Months

பிரியங்கா, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1ஆம் திகதி, உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

பிரியங்காவின் தந்தையான பிஸ்வாஸ், மகள் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்யாமல், அவரது உடலை வீட்டுக்குள்ளேயே வைத்துள்ளார்.

துர்நாற்றம் வெளியே தெரியாமல் இருப்பதற்காக, வாசனை திரவியங்களை தெளித்துவந்த பிஸ்வாஸ், சில நாட்களுக்குப் பின் ஹரித்வாருக்குச் சென்றுள்ளார்.

அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்திலுள்ள மக்கள் பொலிசாருக்கு தகவலளிக்க, போலிசார் அந்த வீட்டை சோதனையிட, சந்தேகம் ஏற்படாமல் இருப்பதற்காக, வீடு முழுவதும் பிஸ்வாஸ் குப்பைகளால் நிறைத்துவைத்திருந்தது தெரியவந்தது.

குப்பைகளுக்கிடையில், அழுகி, கிட்டத்தட்ட எலும்புக்கூடாக மாறியிருந்த பிரியங்காவின் உடலை மீட்ட பொலிசார், அதை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்துள்ளார்கள்.

பொலிசார் துவக்கிய விசாரணையைத் தொடர்ந்து, புதன்கிழமை, பிஸ்வாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *