குறைந்த தொகையில் எளிதாக தங்கம் வாங்கலாம் – NSE புதிய திட்டம்

1 Min Read

இந்தியர்கள் தங்கத்தை ஒரு முக்கிய முதலீடாக கருதி வருகின்றனர்.

அதேவேளையில், தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் சாமானியர்கள் சுலபமாக வாங்க முடியாத நிலை உள்ளது.

குறைந்த தொகையில் எளிதாக தங்கம் வாங்கலாம் - NSE புதிய திட்டம் | Nse Introduces Electronic Gold Receipt

ஆனால், டிஜிட்டல் தங்கம் என்ற முறையில் மக்கள் தங்கத்தில் முதலீடு செய்து வந்தனர். இதில் ரூ.10 போன்ற குறைந்த தொகையில் கூட தங்கத்தில் முதலீடு செய்ய வாய்ப்பு கிடைத்தது.

ஆனால், டிஜிட்டல் தங்கம் மற்றும் இ-தங்கப் பொருட்களில் முதலீடு செய்வதற்கு பத்திரச் சந்தை வரம்பிற்குட்பட்ட முதலீட்டாளர் பாதுகாப்பு வழிமுறைகள் எதுவும் கிடைக்காது என இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் செபி(SEBI) எச்சரிக்கை விடுத்தது.

எலக்ட்ரானிக் கோல்ட் ரெசிபிட்

இந்நிலையில், குறைந்த தொகையில் ஆன்லைன் மூலம் தங்கத்தில் முதலீடு செய்யும் வகையில், எலக்ட்ரானிக் கோல்ட் ரெசிபிட் (electronic gold receipt – EGR) எனும் புதிய வர்த்தக பிரிவு தேசிய பங்குச் சந்தையில்(NSE) தொடங்கப்பட்டுள்ளது.

குறைந்த தொகையில் எளிதாக தங்கம் வாங்கலாம் - NSE புதிய திட்டம் | Nse Introduces Electronic Gold Receipt

இதில், நிறுவனத்தின் பங்குகளை வாங்கி விற்பது போல், தங்கத்தை வாங்கி விற்க முடியும். இதில் தங்கம் வாங்கியதற்கு ஆதாரமாக டீமேட் கணக்கில் ரசீது வழங்கப்படும்.

நீங்கள் வாங்கிய தங்கம் செபியால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பாதுகாப்புப் பெட்டகத்தில் பத்திரமாக சேமித்து வைக்கப்படும்.

நீங்கள் விரும்பும் போது, இதனை பங்குகளை போல் விற்கவோ அல்லது தங்கமாகவோ மாற்றிக்கொள்ள முடியும்.

வீட்டில் தங்கமாக வாங்கி வைக்கும் போது அதன் பாதுகாப்பு, செய்கூலி, சேதாரம் போன்ற பிரச்சினைகள், இந்த EGR தங்கத்தில் இல்லை. அதன் தூய்மைக்கு 100சதவீத உத்தரவாதம் வழங்கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *