13 பேர் உயிரிழந்த ஜபல்பூர் படகு விபத்தில் மீட்புப் பணி நிறைவு

1 Min Read

மத்திய பிரதேச மாநில ஜபல்பூர் மாவட்டத்தில் பர்கி அணை​யில் கடந்த வியாழக்கிழமை அன்று சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (03) காலை தமிழகத்தை சேர்ந்த காமராஜ் (39), மயூரன் (5) ஆகியோரது உடல்கள் மீட்கப்பட்டது.

விபத்தில் சிக்கிய படகில் சுமார் 41 பேர் பயணித்ததாக அம்மாநில போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். இதில் 28 பேர் மீட்கப்பட்டனர். 13 பேர் உயிரிழந்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் இந்த தகவலை அளித்துள்ளனர்.

படகை இயக்கியவர்களின் அலட்சியம்தான் இந்த விபத்துக்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் உறுதி செய்துள்ளனர். இது தொடர்பாக வெளியான வீடியோவில் படகுப் பயணங்​களின்போது செய்ய வேண்​டிய அடிப்​படை பாதுகாப்பு விதி​களைக் கூட விபத்தில் சிக்கிய படகை இயக்​கிய ஊழியர்​கள் பின்​பற்​ற​வில்லை என்று தெரிய வந்​துள்​ளது.

மீட்புப் பணி நிறைவு: இந்தச் சூழலில் இன்று (03) படகு விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நிறைவடைந்ததாக ஜபல்பூர் மாவட்ட ஆட்சியர் ராகவேந்திரா சிங் எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார். மீட்புப் பணியில் அயராது உழைப்பை செலுத்திய பல்வேறு துறையினருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு மத்தியப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *